Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி” பஞ்சாயத்து துணை தலைவியின் புகார்…. போலீஸ் அதிரடி….!!!

பஞ்சாயத்து துணை தலைவியின் கையெழுத்தை போலியாக போட்டு 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே இருக்கும் பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மாரியம்மாள் துணைத்தலைவியாக இருக்கிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு ‘செக்’ மூலம் வங்கியிலிருந்து 9 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |