மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தியாகராஜனை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தியாகராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.