Categories
மாநில செய்திகள்

கைரேகை அவசியமில்லை…. அரிசி அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் தைப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடும் விதமாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கபடும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்களும் மஞ்சப் பையில் வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகையை கட்டாயமில்லை குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் அட்டையை காண்பித்து பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |