அம்பை பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம், அம்பையில் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காலையில் கோபூஜை, கஜ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ஹோமம் நடைபெற்றதை தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
இதை தொடர்ந்து பூந்தட்டு ஊர்வலமும், நீராழி மண்டபத்தில் சிறுவர் சிறுமிகளின் பரத நாட்டியம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்பின் இரவு 8 மணிக்கு மேல்பஞ்ச மூர்த்திகள் தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 11 முறை சாமி சன்னதி சுற்றி வலம் வந்து தெப்ப உற்சவம் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.