Categories
தேசிய செய்திகள்

“கைல சுத்தமா நிலக்கரி இல்ல”… ஆந்திர முதல்வர் எழுதிய லெட்டர்… பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்…!!!

உடனடியாக ஆந்திர மாநிலத்தின் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி தேவை என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருப்பதால் அவசர உதவி வேண்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 45 சதவீதத்தை பூர்த்தி செய்யும் மாநில மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்கள் மட்டுமே வரும்.

இதனால் மின் உற்பத்தி நிலையங்களில் 50% திறனில் மட்டுமே இயங்குவதாக தெரிவித்துள்ளார். மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வெளிச்சந்தையை சார்ந்து இருப்பதாகவும், இதன் விலை யூனிட் 4 ரூபாய் 60 காசுகள் என்று நிலையிலிருந்து, தற்போது 15 ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |