Categories
தேசிய செய்திகள்

கைவிட்ட விமானம், கைகொடுத்த ஆம்புலன்ஸ்…. 2600 கிமீ தூரம், 41 மணி நேர பயணம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மஹந்தி ஹசன் என்பவர் கடந்த மாதம் 25-ம் தேதி இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனால் கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சொந்த ஊருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு அழைத்துச் செல்ல விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே அணில் ரூபன் என்பவரின் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் 2600 கிலோமீட்டர் தூரத்தை 41 மணி நேரம் பயணித்து மொராதாபாத் மருத்துவமனைக்கு பத்திரமாய் போய் சேர்ந்தார். இதற்கு காரணமாக இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |