Categories
மாநில செய்திகள்

கைவிரல் ரேகை பெறாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்கலாம் …!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கைவிரல் ரேகையில் அங்கீகாரம் பெறாவிட்டால் மற்ற முறைகளை கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மட்டுமின்றி பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வழங்க கைவிரல் ரேகை முதல்நிலை அங்கீகாரம் ஆகும். கைவிரல் ரேகையை அங்கீகரித்து பொருள்களை வழங்க இயலாத நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி பொருட்கள் வழங்க வேண்டும் என அனைத்து கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல சுப்பிரமணியன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் பொருள்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |