Categories
உலக செய்திகள் கொரோனா

கை கழுவுறாங்க… ஆனா ‘மாஸ்க்’ அணிய மாட்டுக்காங்க… பின்தங்கியிருக்கும் இங்கிலாந்து.. நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி எச்சரிக்கை..!!

முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் கொரானா வைரஸ் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 291 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இச்சூழ்நிலையில் 44 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், இங்கிலாந்து கொரோனா தொற்று நோயால்  மிக மோசமாக பாதிப்படைந்த முதல் பத்து நாடுகளில் 7 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக  அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வரும் நிலையில் முக கவசம் அணிவதில் இங்கிலாந்து நாடு தற்போது மிகவும் பின்தங்கி உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்திய வம்சாவளி விஞ்ஞானியும் நோபல் பரிசு வென்றவருமான கொரோனாவிற்கு எதிரான தகவல்களை பகுப்பாய்வு செய்யும் இங்கிலாந்தின் உயர்மட்ட நிபுணர் குழுவின் தலைவர் மற்றும் ராயல் சொசைட்டியின் தலைவருமான பேராசிரியர் வெங்கி என்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறுகையில், “முக கவசம் அணியாமல் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொது  இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளி பின்பற்றுவது என்பது மிக கடினமாக உள்ள இந்த நிலையில் மக்கள் கட்டாயமாக அனைவரும் முக கவசம் அணிந்து  வெளியே வரவேண்டும்.

தொற்று பற்றி விழிப்புணர்வு ,கொள்கைகள் மற்றும் முக கவசம் அணிவது போன்ற வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் பின்தங்கியே இருக்கிறது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கின்றனர், கைகளை கழுவகின்றனர் ஆனால் முக கவசத்தை அணிவதில்லை. பானங்களை பருகுவதற்கு வீட்டை விட்டு வெளிவருவது சற்று இயல்பானதாகதான்  இருக்கிறது. கார் ஓட்டும்போது இருக்கையை பெல்ட்டுகளை அணியாமல் ஓட்டுவது சாதாரண செயல் ஆகிவிட்டது, ஆனால் இச்செயல் சமூகத்திற்கு மிகவும் எதிரானதாகும்.

இதைப் போன்றே முக கவசம் அணியாமல் செல்வதும் சமூகத்திற்கு எதிரானதாக கருதப்பட வேண்டும். கொரோனா தொற்றின் பரவலை இங்கிலாந்து தடுக்க வேண்டுமென்றால் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் ,கைகளை கழுவுவது போன்றே முக கவசம் அணிவதும் சம அளவில் இருக்க வேண்டியது முக்கியமாகும். இவை இவர்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்குமே முக்கியமானதாகும். மக்கள் சமூக விலகலை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் கூட முக கவசத்தை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் இதுவே மக்கள் செய்யவேண்டிய சரியான செயலாகும்.

நோய் தொற்றுகள் மேலும் பரவாமல் குறைப்பது மட்டுமின்றி தொற்று நோய்க்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகள் சிறந்து விளங்குவதற்கும்  ஒரு சிறிய விலை கொடுங்கள். இங்கிலாந்து நாட்டில் கொரானா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையிலும் பொதுமக்களில் மிகக் குறைவனவரே முக கவசம் அணிந்து வெளியே செல்கின்றனர். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தில் முக கவசம் அணியும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது” என கூறியுள்ளார்.

Categories

Tech |