வேலைக்காக ராஜஸ்தான் சென்ற இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் வேலைக்காக ராஜஸ்தான் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்கள் 4 பேர் ராஜஸ்தானில் உள்ள சுரு என்ற நகருக்கு வரவழைத்தனர். அந்த இளைஞர்களை நம்பி சென்ற அந்த பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இரக்கமில்லாத இளைஞர்கள் அந்த பெண்ணின் கை, கால்களை கட்டி மாடியில் இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்னை கட்டிய கயிறு கம்பத்தில் மாட்டி உள்ளது. அதனால் அவர் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நான்கு இளைஞர்களையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.