மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலம் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் முக்கிய பகுதிக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் சோனிபட் பகுதியில் உள்ள குண்டலியின் வாலிபரை கொன்றதாக சிக்கிய குழுவான நிஹாங்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக கூறி, அந்த வாலிபரை நிஹாங்ஸ் குழு அடித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வாலிபரை அடித்துக் கொன்று உடலை போலீஸ் தடுப்பில் தொங்க விட்டதாகவும் அதன் பிறகு மணிக்கட்டை வெட்டியதாகவும் கூறப்படுகின்றது. வாலிபர் குறித்த எந்த விவரமும் தற்போது வரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.