பாஜகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசுக்கு ஓட்டு போட சொன்ன காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து 22 எம்எல்ஏக்கள் விலகினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக சார்பாக சிந்தியா ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் பாஜக வேட்பாளரான இமார்டி தேவியை ஆதரித்து நவம்பர் 3 ஆம் தேதியில் கை சின்னம் பட்டனை அழுத்தி காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என கூறிவிட்டார். அதன்பிறகு தான் தவறாக கூறியதை உணர்ந்துகொண்டு அதனை திருத்தி தாமரை சின்னத் பட்டனை அழுத்தி பாஜகவிற்கு வாக்களியுங்கள் என கோரினர்.
இதுதொடர்பான காணொளி வெளியானதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி அதனைக் குறிப்பிட்டு “சிந்தியா நவம்பர் மூன்றாம் தேதி மத்திய பிரதேச மக்கள் கைச் சின்னத்திற்கு ஓட்டு அளிப்பார்கள் என நான் உறுதியளிக்கிறேன்” என ட்வீட் செய்திருந்தார். ஜோதிராதித்யா கூறியது காணொளியாக வைரலானதால் இதனைப் பார்த்த பலரும் பாவம் அவரே கன்பியூஸ் ஆகிவிட்டார் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.