கைகளில் ஏற்பட்டு வரும் மூட்டு வலிகளை குறைக்கும் சில வழிமுறைகளைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கைகளில் உள்ள மூட்டுகளில் வலி ஏற்படுவதால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயர் வைத்து உள்ளனர். ஒரு எலும்பானது மற்றொரு எலும்புடன் உரசுவதால் உடம்பில் ஏற்படும் வலிக்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
ஆர்த்ரிடிஸ் வலியானது உடம்பில் குறைவாகவோ அல்லது தாங்க முடியாத வலியாகவோ இருக்கலாம். அந்த பிரச்னை நெடு காலத்திற்கு நீடித்திருந்தால் உடம்பில் உள்ள வலியானது அதிகமாகி பல பிரச்சனைக்கு வழிவகுத்து விடும். அதற்காக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். அதனை குணப்படுத்த வீட்டிலுள்ள பொருள்களை வைத்து சில நிவாரணங்களும் உள்ளன. அதன் மூலம் கடுமையான மூட்டு வலியை சற்றே குறைத்து கொள்ள முடியும்.
எடையை குறைக்க முயற்சிக்கும் போது, அதிகமான அழுத்தத்தை மூட்டுகளில் கொடுக்காமல் இருக்க வேண்டியதும் அவசியம். எடையை நிதானமான முயற்சியில் குறைத்தால் கை மூட்டுகளில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும்.
கைகளில் வரும் ஆர்த்ரிடிஸ் வலிகளை உடனடியாக குறைக்க சில பிரத்யோகமான பயிற்சிகள் உள்ளன. கைகளை நீட்டவும், முழங்கைகளை மடக்கியும் சில பயிற்சிகளை செய்யலாம். எளிதில் கை வழியை குணபடுத்த இயலும்.
உங்களுக்கு ஏற்ற கிரீமை எடுத்துக் கொண்டு, கைகளில் எப்பொழுதெல்லாம் வலி வருகிறதோ அப்பொழுதெல்லாம் தடவிக் கொள்ளுங்கள். அந்த கிரீம் உடனடி நிவாரணம் அளிக்கக் கூடியதாக அமையும்.
பனை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். எண்ணெயை சூடாக்கி மசாஜ் செய்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி ஜுஸ் குடித்தால் மூட்டு வலி மற்றும் சதைகளின் வலியைக் குறைத்து வலிக்கு நிவாரணம் அளிக்கும். அதில் ஆன்டிசெப்டிக் குணங்களும் உள்ளன.