அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.
சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என்றும், கொக்கு போல இறையை தேடுபவர்களால் அதிமுக-விற்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாது என்றும், அதிமுக அசைக்கமுடியாத தொண்டர்களை கொண்ட இயக்கம் என கூறினார். மேலும் அதிமுக-விற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் சசிகலா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.