Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடிய 3 பேர்….. “ஒருவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு”…..!!!!!

கொங்கணாபுரம் அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் ஆடு ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் போலீசை கண்டதும் விரைந்து சென்றதால் போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.

மற்ற இருவரும் தப்பிச் சென்று விட்டார்கள். இதில் பிடிப்பட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சிவகுமார் என்பதும் கனகராஜ் என்பவரின் வீட்டில் இருந்து ஆடு திருடியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |