Categories
தேசிய செய்திகள்

கொங்குநாடு என்பது எழுத்துப்பிழை…. எல்.முருகன் விளக்கம்….!!!!!

தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற இணை அமைச்சர்களின் பட்டியல் குறித்த சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் கொங்குநாடு – தமிழ்நாடு என இடம் பெற்று இருந்தது. இதையடுத்து சர்ச்சைகள் வெடித்தன. தமிழ் நாட்டை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அனைவரும் குற்றம் சாட்டிய நிலையில் அது எழுத்துப் பிழையால் ஏற்பட்ட தவறு, அதை யாரும் விவாதிக்க வேண்டாம் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |