செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நீங்கள் கொங்கு நாடு பாஜக என்ற தனிக்கட்சியை ஆரம்பிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த அவர், என் கட்சியை ஆரம்பித்து நான் மட்டும் தான் நடத்திக்கணும்னு நினைக்கின்றேன். அப்படியெல்லாம் இல்லை.
நம் கட்சியை பொருத்தவரை எந்த ஒரு தனி மனிதனுக்கும் தனி சித்தாந்தம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை என்பவர் ஒரு சாதாரண மனிதன், ஒரு பொறுப்பை கொடுப்பதற்காக அண்ணாமலை இன்று மீடியா முன்பு பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் நம் கட்சியினுடைய கொள்கை.
அண்ணாமலையை பொருத்தவரை இந்த கட்சிக்கு நான் செய்து இருக்கிறனோ… அதை விட அதிகமாக இந்த கட்சி அண்ணாமலை என்ற தனி மனிதனுக்கு கொடுத்திருக்கிறது. என்னை விட முக்கியமான தலைவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக அருகில் நாராயணன் ஐயா இருக்கிறார்கள்.
அவர் என்னைவிட கட்சிக்காக அதிகமாக உழைத்தவர், பேசியவர், வாதிட்டவர், கட்சியினுடைய கொள்கையை எடுத்துக் கூறியவர். அவர்களுக்கு ஒரு பொறுப்பு. அதை போன்று எனக்கும் ஒரு பொறுப்பு. நான் ஒரு சிறிய மனிதன். ஒரு பெரிய கட்சியில ஒரு பெரிய பதவியில் இருக்கிறேன். மேலும் ஊடகங்களில் தொடர்ச்சியாக என்னைப்பற்றி ஏதோ ஒரு விஷயத்தை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏற்கனவே கூறியது போல,
யார் என்ன போட்டாலும்… அதை படித்து சிரித்து விட்டு போய் விடுவேன். எந்த பத்திரிக்கை நண்பர்களின் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. ஏனென்றால் பொது வாழ்விற்கு வந்த பின்னர் 10 நண்பர்கள் 10 விதமான கருத்துக்களை கூறுவது சகஜமான ஒன்று. அதில் உண்மையான கருத்து, பொய்யான கருத்து உள்ளது. அதை மக்கள் நடவடிக்கையை பார்த்து புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.