கோவையின் முக்கிய பகுதிகளில் திமுகவினர் ஒட்டியுள்ள கொங்குல, இனி எவனுக்கும் பங்கு இல்ல போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் முக்கிய பகுதிகளில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதில் கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல என்ற வாசகங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அரசு அலுவலகங்கள் உருமாற்றம் தடைச் சட்டம் 1959-ன் படி போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியினரே அதனை மீறும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.