கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் நிறைய மருந்துகளை பயன்படுத்துகிறோம். அது அனைத்துமே நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அது இல்லாமல் தாவரங்களை வைத்து கொசுக்களை எப்படி விரட்டுவது என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
இனி வருவது மழைக்காலம் .மழைக்காலங்களில் கொசுக்கள் அதிக அளவில் இருக்கும். அவற்றை விரட்டுவதற்கு நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் கொசுக்கள் ஒழியும். ஆனால் அதே சமயம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆஸ்துமா போட்ட நோயாளிகளுக்கு இது போன்ற மருந்துகளை சுவாசிக்கும் போது பெரும் பிரச்சனை ஏற்படும். இதனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள சில தாவரங்களை வைத்து எப்படி கொசுக்களை விரட்டலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
முதலாவது சிட்ரோனெல்லா புல் இது கொசுக்களை விரட்ட பயன்படுகிறது. இந்த புல்லில் தனித்துவமான நறுமணம் காணப்படும். இதை தோட்டத்தில் அல்லது வீட்டில் வைத்து வளர்த்து வரலாம். கொசுக்களை விரட்டுவதற்கு இது பெரிதளவில் பயன்படுகின்றது.
அடுத்தது துளசி, பெரும்பாலான வீடுகளில் இருக்கும். துளசி கொசுக்கள், ஈக்கள் போன்ற பூச்சிகளை விரட்ட உதவுகின்றது. இதனை அதிக சூரிய ஒளிபடும் இடங்களில் வைத்து வளர்த்து பயன்படுத்தலாம். கொசுக்கடியில் இருந்து உங்களை பாதுகாக்க இதன் இலைகளை சருமத்தில் தேய்த்து வரலாம்.
சாமந்திப்பூ சாமந்திப்பூவின் வாசனை கொசுக்களை விரட்டும் பண்பு கொண்டது. இந்த சாமந்தி செடியை ஜன்னளில் கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்துவிட்டால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாது. இதனையும் நாம் மாடி வீடுகளில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.
ரோஸ்மேரி ஒரு சிறந்த மூலிகை மட்டுமல்ல கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது. இதை வீட்டில் வளர்த்து வந்தால் இந்த வாசனையை பார்த்து கொசுக்கள் ஓடிவிடும். அடுத்தது புதினா, புதினா இலைகளை எடுத்து நசுக்கி தோளில் தடவி வந்தால் கொசுக்கள் நம்மை கடிக்காது. புதினாவின் நறுமணம் கொசுக்களுக்கு பிடிக்காது.
சமையலறையில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இதை போட்டு வைத்து விடலாம். இந்த வாசனையை கண்டால் கொசு ஓடிவிடும். ஜரனியம் தாவரம், ஜரனியம் எலுமிச்சை நறுமணத்தை கொண்டது. இதன் சிட்ரஸ் சுவாசனை இயற்கையாகவே கொசுக்களை விரட்ட பயன்படுகின்றது.
அல்லியம் தாவரம் அல்லியம் தாவரத்தின் வெங்காய வாசனை கொசுக்கள் உட்பட பலவிதமான பூச்சிகளை விரட்ட பயன்படும். பி பாம் தாவரம், இந்த தாவரத்தை நாம் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் மட்டும் பிற பூச்சிகள் அண்டாது. பூண்டு தாவரம், பூண்டின் கடுமையான வாசனைகள் கொசுவிற்கு சுத்தமாக பிடிக்காது. பூண்டு சாற்றை சிறிதளவு எடுத்து நாம் தோளில் தேய்த்தால் கொசுக்கள் கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.