மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் ஆழ்வார்புரம் பகுதியில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் வீட்டில் கொசுவர்த்தி சுருளை பெற்ற வைக்க முயன்றார். முன்னதாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது.
இதனால் தீ பற்றி ரகுமானின் உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரகுமானை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.