வாலிபர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரில் ஜெகதீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீஷ் தனது வீட்டில் கொசுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். அதன் பிறகு தனது தாயின் புடவையைப் போர்த்திக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் கொசுவர்த்தி சரிந்து புடவை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
மேலும் ஜெகதீசன் உடலில் தீ வேகமாக பரவியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தனது ஜெகதீசை உடல் கருகிய நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.