விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சுப்ரமணியர் கோவில் தெருவில் செல்லசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சிவ பாக்கியம்(82) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியம் இரவு நேரத்தில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்து விட்டு தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கொசுவர்த்தி சுருள் தீ கட்டிலில் இருந்த துணிகளில் பிடித்து மூதாட்டி மீது வேகமாக பரவியது.
இதனால் வலி தாங்க முடியாமல் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சட்டம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.