Categories
அரசியல்

கொசு மருந்து அடிக்கும் பணியை கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்….. மேயர் பிரியா உத்தரவு….!!!!

தூய்மை பணிகளை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் பதவி ஏற்றுக் கொண்டவுடன் வார்டுகளில் அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா ஒவ்வொரு கவுன்சிலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின்படி ஒவ்வொரு கவுன்சிலர்களும், தங்கள் வார்டுகளில் நடைபெறும் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இதனையடுத்து வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சனை, கழிவு நீர் அடைப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சரி செய்ய வேண்டும். அதன்பிறகு தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை தினந்தோறும் கவுன்சிலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை வார்டுகளில் இருக்கும் குப்பை தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும். அதேப்போன்று கொசு மருந்து சரியான முறையில் தெளிக்கப்படுகிறதா என்பதையும் கவுன்சிலர்கள் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |