Categories
தேசிய செய்திகள்

கொச்சி மெட்ரோ ரயிலில் சுதந்திர தின ஸ்பெஷல்!…. ரூ.10 மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கொச்சிமெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் 75வது வருட விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ தயாராகி இருக்கிறது.

இதனையொட்டி பல ரயில் நிலையங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் பயண சுதந்திர சலுகையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அந்த அடிப்படையில் எந்தவொரு நபரும் கொச்சி மெட்ரோ ரயிலில் ரூபாய்.10 கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம். இதற்காக எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையில் ரூபாய் .10 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். எவ்வளவு தொலைவு  வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் லோக்நாத் பெஹரா முட்டம் பகுதியிலுள்ள ஓ.சி.சி. கட்டிடத்தில் இன்று தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல் ரயில் நிலையங்களில் நாட்டுப்பற்று பாடல்கள், நடனங்கள் ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் வழங்குகின்றனர். அத்துடன் பிளாஸ்டிக்கிலிருந்து விடுதலைக்கான பிரசாரத்தின்படி, 10 ஆயிரம் பருத்தியினால் ஆன பைகள் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட இருக்கிறது. இது தவிர மேஜிக் ஷோக்கள் மற்றும் கராத்தே போட்டிகளையும் நடத்தி பள்ளி மாணவர்கள், ரயில் பயணிகளை மகிழ்விக்க இருக்கின்றனர்.

Categories

Tech |