இந்தியாவிலேயே அதிகமாக போய் பேசுகிற ஒரே தலைவர் திமுக தலைவர் தான் என முதலமைச்சர் பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் முதலமைச்சர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முக ஸ்டாலின் தந்திரமாக, கவர்ச்சியாக பேசி ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக தெரிவித்தார். திமுக என்றாலே அராஜக கட்சி , ரவுடி கட்சி என குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிச்சாமி, கொஞ்சம் ஏமாற்றத்தால் திமுகவினர் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் எனவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து மீஞ்சூரில் திறந்த வெளியில் நின்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிச்சாமி, இந்தியாவிலேயே அதிகமாக போய் பேசுகிற ஒரே தலைவர் மு . க . ஸ்டாலின் தான் என விமர்சித்தார். பொய் பேசுவதில் நோபல் பரிசு அளிப்பது என்றால் ஸ்டாலின் பொருத்தமானவராக இருப்பார் என தெரிவித்த முதலமைச்சர் , ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதாக வும் குற்றம் சாட்டினார் .