Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே மினிவேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமாஞ்சோலை கிராமத்தில் ஜேம்ஸ்பிரவீன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவச்சந்திரன் (24) என்ற நண்பர் இருந்தார். சிவசந்திரனும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக திருமாஞ்சோலைக்கு இருவரும் சென்றனர். அதன் பின் அங்கிருந்து மதுரைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சிவச்சந்திரன் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். ஜேம்ஸ்பிரவீன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் குயவன்குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.

இதில் சிவச்சந்திரன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜேம்ஸ் பிரவீன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார். மேலும் இதில் மினி வேனில் வந்த மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சுண்ணாம்பூர் கிராமத்த்தில் வசித்து வரும் அக்கினி, பந்தானசெல்வி, மினி வேன் டிரைவர் முனியாண்டி ஆகிய 3 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜேம்ஸ் பிரவீன் பூவந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |