ஒரு அற்புதமான மருத்துவம் கொண்ட மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நாம் அவ்வாறு தினமும் சாப்பிடும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக கீரை வகைகள் மற்றும் பழங்கள், காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகளின் மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட மணத்தக்காளிக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. அது ஒரு அற்புத மருத்துவம் கொண்ட கீரை. 100 கிராம் கீரையில் 82 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.
இந்தக்கீரை புற்றுநோய் வராமல் தடுப்பது கூறப்படுகிறது. மேலும் இதை தினசரி பயன்படுத்த மணத்தக்காளி கீரை, கூட்டு மற்றும் சூப் என்று தயாரித்து உண்ணலாம். குறிப்பாக சூப்பை மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டைக்கு இதமளிக்கும். மணத்தக்காளி விதைகளை வாங்கி சிறிய இடத்தில் நட்டால் நன்றாக வளரும். தினமும் இதனை சாப்பிட்டு வர உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.