செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு ஆட்சியை ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களால் சொல்லப்பட்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வசதியாக மறந்து விட்டாரா என்று நான் கேட்க விரும்புகின்றேன். 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி, தலைவர் கலைஞர் பெயரிலேயே ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான ஆரம்பித்து,
தெய்வப்புலவராக இருக்கக் கூடிய திருவள்ளுவருடைய படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி.அதுமாத்திரமல்ல அன்றைக்கு கஜா புயல் அவர்கள் ஆட்சியில் வந்தபோது, சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கிய போது, அதற்காக பல்வேறு இடங்களிளே தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திலும் போய் அவர்களுக்கெல்லாம் நிவாரண பொருட்களை வழங்கி போது,
அப்படி தனியார் செய்யக்கூடிய அந்த நிவாரண பொருட்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அதிமுகவினரை வைத்து அவற்றில் எல்லாம் அவர்களுடைய பெயரையும், ஸ்டிக்கரையும் ஒட்டிக் கொண்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது.இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், பொங்கலுக்காக கொடுக்கப்பட்ட கரும்புகளின் கணுக்களில் கூட ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரப்படுத்திக் கொண்ட ஆட்சி தான் அது.
ஆனால் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் ஆட்சியில் பொங்கல் பையாக இருந்தாலும் சரி, எந்த பையாக இருந்தாலும் சரி, அதில் முதலமைச்சரினுடைய படம் கூட இல்லாத நல்ல சூழலை உருவாக்க கூடிய ஆட்சியை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.