Categories
தேசிய செய்திகள்

மனித நேயம் எங்கே போனது…? மாற்றுத்திறனாளியை கட்டையால் தாக்கி பயங்கரம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…..!!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது 3 சக்கர ஸ்கூட்டரில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி நபரை சுற்றிவளைத்த ஒரு ஆணும், பெண்ணும் பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கட்டையால் மாற்றுத்திறனாளியின் பைக்கை அடித்து நொறுக்கினர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதாவது இது காட்டுமிராண்டித்தனம் எனவும் மனிதநேயம் எங்கே எனவும் பலரும் கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர். தாக்கப்பட்ட நபரும், அந்த மாற்றுத்திறனாளியும் உறவினர்கள் எனவும் சொத்து தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |