Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல!…. போலீஸ் செய்த செயலால் காலை இழந்த சிறுவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர்.

இதன் காரணமாக தண்டவாளத்தில் காவல்துறையினர் வீசிய அந்த தராசை எடுப்பதற்காக சிறுவன் இர்பான் சென்றுள்ளார். அப்போது ஸ்பீடாக வந்த ரயில் இர்பான் காலில் மோதியதில் அவரது கால் துண்டானது. இதனால் இர்பான் வலியில் அலறி துடித்தார். அதன்பின் சிறுவன் இர்பானை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இழந்த காலை மீண்டும் பொறுத்த முடியாமல் போனது.

இதன் காரணமாக சிறுவன் இர்பான் தன் காலை இழந்தான். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தராசை ரயில் தண்டவாளத்தில் வீசி சிறுவன் தன் கால் இழக்க காரணமான தலைமை காவலர் ராகேஷ்குமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள கண்டன குரல் எழுந்தது. அதன்பின் தலைமை காவலர் ராகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மேலும் விசாரணைக்கு பிறகு ராகேஷ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |