தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்த மீனா, ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் சந்தித்து நட்பு பாராட்டி கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை மீனாதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். அதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
தனது கணவரின் இறப்பிலிருந்து மீள முடியாத மீனா கடந்த ஒரு மாதமாக சமூக வலைத்தளங்களில் பெரிதளவு தன்னை காட்டிக் கொள்ளவில்லை. இந்நிலையில் மீனாவின் நெருங்கிய நண்பர்களான ரம்பா,சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் தனது குடும்பத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். அந்த புகைப்படங்களை தற்போது மீனா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.