Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் கொஞ்சமா எடுத்தேன்” வேலைக்கார பெண் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தொழிலதிபரின் வீட்டில் திருடிய குற்றத்திற்காக வேலைக்கார பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூரில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் தொழிலதிபரான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள ரகசிய அறையில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகை காணாமல் போனதாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரசேகரின் வீட்டில் வேலை பார்க்கும் சத்யா என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் கண்காணித்துள்ளனர்.

இந்நிலையில் வெளியூர் தப்பி செல்ல முயன்ற சத்யா, அவரது தங்கை லட்சுமி, நண்பர்களான விக்னேஷ், பிரகாஷ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சந்திரசேகரின் வீட்டிலிருந்த 40 பவுன் தங்க நகையை சத்யா கொஞ்சம் கொஞ்சமாக திருடி லட்சுமி உள்பட 3 பேரிடம் கொடுத்து வைத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சத்யா, லட்சுமி உள்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ வெள்ளி, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 27 பவுன் தங்க நகை, புதிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |