Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் டைம் கொடுங்க….. பால்பண்ணை உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி…. வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி….!!

கடனை செலுத்த கால அவகாசம் வேண்டும் என வங்கியின் முன்பு பால்பண்ணை உரிமையாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். பால் பண்ணை நடத்தி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறை தனியார் வங்கி ஒன்றில் 12 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அதற்க்கான தவணை தொகையை மாதந்தோறும் தவறாமல் செலுத்தி கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக செல்வம் தவணை தொகை முறையாக செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது வீட்டை ஏலம் விடப்போவதாக கூறி வங்கி நிர்வாகிகள் செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு பிறகும் அவர் எந்தவித பதிலும் தெரிவிக்காததால் வங்கியின் சார்பில் செல்வத்தின் சொந்தமான வீட்டை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையறிந்த செல்வம் வங்கிக்கு சென்று கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிகொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக செல்வத்தை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அவரை முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து ஏலத்தை தள்ளி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |