Categories
கால் பந்து விளையாட்டு

கொஞ்சம் தள்ளி போப்பா…. “மறைக்குது”….. கேப்டனை தள்ளிய ஆளுநர்…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல. கணேசன் விருது வழங்கும் விழாவின் போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை ‘தள்ளிய’ வீடியோ வைரலாகி வருகிறது.

20 அணிகள் இடையேயான 131-வது தூரந்த் (டுராண்ட்) கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த  கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மதிப்புமிக்க டுராண்ட் கோப்பையை வென்றதது பெங்களூரு எஃப்சி.

டுராண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆளுநர் இல.கணேசன் டுராண்ட் கோப்பை கோப்பையை சுனில் சேத்ரிக்கு வழங்கினார். அப்போது இல கணேசன் தான் புகைப்படத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக கேப்டன் சுனில் சேத்ரியை சற்று கையால் தள்ளினார்.. போட்டி முடிந்ததும் கோப்பை வழங்கும் விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சமூக ஊடக பயனர்கள் ஆளுநரின் நடத்தையை விமர்சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.. மேலும் இந்த செயல் சமூக ஊடகங்களில் கால்பந்து ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை, அவர்கள் அமைச்சரின் செயலை விமர்சித்து வருகின்றனர்..

Categories

Tech |