மதுரையில் ஆட்டோ மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பாரத் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அதே பகுதியிலிருக்கும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ திடீரென்று அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.