நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டல் வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ரவண சமுத்திரத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டல் தொழிலாளியாக வேலைப்பர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாண்டி மோட்டார் சைக்கிளில் செங்குளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது மற்றொரு வாகனம், தங்கபாண்டியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் தங்கபாண்டி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் தங்க பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தங்கபாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாப்பாக்குடி காவல்துறையினர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.