கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அவினாஷ்(40) இவர், கடந்த 9 ஆண்டுகளாக பொறித்த எண்ணெயில் கார் ஓட்டி வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அவர் இது வரை 1.20 லட்சம் கி.மீ. வரை கார் ஓட்டியுள்ளார். அதாவது, அவர் முதலில் கடைக்கு சென்று பஜ்ஜி, போண்டா, போன்று பல பொருட்களை பொறித்த எண்ணெயை குறைந்த விலை வாங்கி வருவார்.
இதையடுத்து வாங்கி வந்த எண்ணெயை சுத்திகரிப்பு செய்வார். பின்னர் அதனை எரிபொருளாக மாற்றி தனது காருக்கு பயன்படுத்தி காரை உபயோகப்படுத்தியுள்ளார். அந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு வெறும் ரூ.65 மட்டுமே ஆவதாக அவர் கூறுகிறார். அவ்வாறு சுத்திகரிக்கப்படும் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மி.லி எரிபொருள் கிடைக்கிறது. இதனால் இவரது காருக்கும் இதுவரை எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை.