Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க…. சாலையோரம் நிற்கும் விலங்குகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகள் சாலையோரம் நிற்பதால் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-மைசூரு சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை, காட்டு யானை போன்ற விலங்குகள் மாயார் ஆற்றின் கரையோரம் தண்ணீர் குடித்து விட்டு கூடலூர்-மைசூரு சாலையோரம் நிற்கின்றன. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இரவு நேரத்தில் வாகனங்களை வேகமாகச் இயக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதனையும் மீறி வாகனங்களை வேகமாக இயக்கி வனவிலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |