Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லிப்ட் கொடுக்கறீங்களா….? வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள முகலிவாக்கம் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நந்தம்பாக்கத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் லிப்ட் கேட்பது போல் கையை அசைத்து ஆனந்தின் மோட்டார் சைக்கிளை வழி மறித்துள்ளார்.

இதனையடுத்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த வாலிபர் ஆனந்தை உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடமிருந்த செல்போன்கள் மற்றும் தங்க மோதிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆனந்த் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை தாக்கி செல்போன் மற்றும் தங்க நகை பறித்து சென்ற தங்கராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |