Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் விட்டிருந்தா உயிரே போயிருக்கும்…. GIFT வாங்குவது போல் நாடகமாடி பெண்ணின் வெறிச்செயல்…. பரபரப்பு வீடியோ….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் செல்வராணி என்ற பெண்மணியின் ஃபேன்சி கடை இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காதலர் தினத்துக்கு பரிசு பொருட்கள் வாங்குவது போல வந்துள்ளார். இந்நிலையில் ​​அவர் வாங்கிய கிஃப்டை செல்வராணி பேக் செய்து கொண்டிருந்தார். அப்போது ​​அந்த பெண் தான் வைத்திருந்த Hit Spray-ஐ செல்வராணி மீது அடித்து அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார்.

அந்த திருட்டு பெண்ணின் செயலால் மயக்கம் அடையாது அலறிய செல்வராணி, அப்பெண்ணை தப்பித்து விடாமல் தடுக்க முயன்றுள்ளார். எனினும் அப்பெண் கடையை விட்டு தப்பி சென்றுள்ளார். அதன்பின் தொடர்ந்துச் சென்ற செல்வராணி, அந்த திருட்டு பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் பிடித்துள்ளார். இது குறித்த சி.சி.டிவி காட்சிதான் தற்போது வெளியாகி உள்ளது..

https://twitter.com/gurusamymathi/status/1492469765234774019

Categories

Tech |