செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பெரியகுளம் ஊராட்சி தேர்தல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது எனபது, உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தாண்டி, கட்சிகளை தாண்டி உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, மக்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவு கொடுத்துள்ளார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
அவர்களையும் திமுகவின் பீ டீம் என சொல்வீர்களா ? அதுக்கும், இதுக்கும் முடிச்சி போடுறதுதான் பயம்…. கெமிக்கல் ரியாக்ஷன். கருணாநிதி அவர்கள் சிலைக்கு அனுமதி கொடுத்தது தான் வித்தியாசமான விஷயம், விசித்திரமான விஷயம். ஓ.பன்னீர்செல்வம் பரதராக இருந்ததெல்லாம் உண்மைதான்.அம்மா இருந்த காலத்துல இப்படி இருந்துருக்காரு, அம்மா அவர்கள் மறைவுக்குப்பிறகு அவரை முதல்வராக்கிய சின்னம்மாவை எல்லாரும் முதல்வர் ஆகனும்ன்னு கேட்டப்போது,
பிப்ரவரி ஐந்தாம் தேதி தானே முன்வந்து சுய விருப்பத்தின் பேரில் தான் பரதன் ரோலை செய்தார். அந்த பரதன் ஒரு வாரம் அப்படியே நின்று இருந்தார் என்றால் மீண்டும் அவர் முதல்வர் ஆகி இருப்பர். ஆனால் அந்த பரதன் தவறான முடிவு எடுத்து, இன்றைக்கு இராவணனோடு போய் சேர்ந்ததால் தான் இன்னைக்கு இந்த நிலையில் இருக்காரு.
பரதன் ராமரோட இருக்க வேண்டியவர், இராவணனோடு போய் சேர்ந்துட்டாரு தான் சொன்னேனே தவிர , அவரை இராவணனாலே காப்பாத்த முடியாது என சொல்ல. அவர் நிச்சயம் மனசு கஷ்டத்தோட இருப்பா என்பது எனக்கு தெரியுது. இந்த தேர்தலில் நிச்சயம் அமமுக தலைமையில் கூட்டணி அமையும். ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் எதிரான மனநிலை நிறைய இருக்கு.
திமுகவா வந்து விடக்கூடாது என வாக்காளர் மத்தியில் பெரிய எண்ணம் இருக்கு. அவர்களின் வாக்கு நிச்சயம் அமமுக தலைமையிலான எங்களின் கூட்டணிக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. நிச்சயம் நாங்கள் போட்டியிட்டு அம்மாவின் உண்மையான ஆட்சியை உருவாக்கும். அதன் பிறகு நாங்கள் அதிமுகவை மீட்டெடுப்போம். ஓ.பன்னீர் செல்வம் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் பரதர் ஆயிட்டாருன்னு நினைச்சுப்பேன்.