பெரம்பலூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் நடராஜன் (60) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.