Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாள் தான் ஆகுது…! கோபமடைந்த கிராம மக்கள்… சாலை மறியலால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி அருகே புதிதாக போடப்பட்டிருந்த தார்சாலை சேதமடைந்ததால் கோபமடைந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைபட்டியிலிருந்து வேலன்சேர்வைகாரன்பட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் அதனை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்து 11 ஆயிரம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் அதுவும் ஒரு சில நாட்களில் சேதமடைந்ததால் கோபமடைந்த பொதுமக்கள் சேர்வைகாரன்பட்டி சாலையில் தரமற்ற புதிய தார்சாலை அமைத்ததாக கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் யாரும் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்ற கிராம மக்கள் புகார் ஒன்றை கொடுத்தனர். அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் என்று கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |