Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொஞ்ச நேரத்துல சொல்லணும்…! மோடி தலைமையில் ஆலோசனை… கிளம்பிய நிதி அமைச்சர் …!!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது.

கொரோனா பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார்.

இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை அறிக்கை ஆகும். நிதி நிலை அறிக்கையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் வெளியிடப்படயிருக்கிறது. இதற்காக இன்று காலையே மத்திய அமைச்சர் சீதாராமன் மத்திய நிதி அமைச்சக அலுவலகத்துக்கு வருகை தந்தார். தற்போது அவர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது.

Categories

Tech |