கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கைப் பொருத்தவரை தற்போது தனிப்படையினர் விசாரணை விரிவடைந்திருக்கிறது. ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். இன்றைய தினம் மாவட்ட கண்காணிப்பாளர் பழைய அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
தற்போது காவலர்களும், தனிப்படையினரும் அங்கு வந்துள்ளனர். இன்று இங்கு இருவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கை பொறுத்தவரை முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சையான், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தில் உயிரிழந்த கனகராஜன் சகோதரர், அவருடைய உறவினர்கள் என பல்வேறு நபர்களிடம் தனித்தனியாக தனிப்படையினர் விசாரணை நடத்துகின்றனர். இதுதவிர மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் மற்றும் உதகை மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதுபோன்று தனிப்படை விசாரணை தற்போது பல்வேறு கோணங்களில் விரிவடைந்துள்ளது.