கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், திபு மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரபல செய்தி தொலைக்காட்சி நிருபர், சந்தோஷ்சாமியும் திபுவுடன் குற்றவாளியாக இருக்கலாம் என கருதி இருவருடனும் கலந்துரையாடினர். அப்பொழுது மூன்றாவது குற்றவாளியான திபு பேசியதாவது: “கனகராஜ் அழைத்ததால் தான் அங்கு சென்றேன். அங்கு செல்லும் வரை அது கோடநாடு என்று தெரியாது. மேலும் அவர் அங்கு பணம் நிறைய இருக்கும் குடோன் உள்ளதாகவும், நீங்கள் கேரளாவை சேர்ந்தவர், அதனால் உங்களுக்கு பயம் இருக்காது என்று கூறி அழைத்து சென்றார். முதலில் கனகராஜ் உள்ளே சென்றார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். கனகராஜ் முகத்தில் முகமூடி அணியவில்லை. நாங்கள் முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிந்து அவர் பின் சென்றோம். இதனையடுத்து அவர், உள்ளேய சென்று காகிதம் உட்பட பல்வேறு ஆவணங்களை கொண்டு வந்ததார்” என்று கூறினார்.
இதனை அடுத்து சந்தோஷ்சாமி கூறியதாவது, “இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட இரவில், சிலர் மூன்று கார்களில் போலீசாருடன் வந்தனர். அப்பொழுது சகோதரர் செபியுடன், சஜிவன் இருந்தார். அந்த வேளையில், கனகராஜை கொலை செய்ய கோரி கோவையில் உள்ள ஒருவரிடம் தொலைபேசியில் செபி பேசினார். மேலும் அவர் தான் ஒரு விருந்து நிகழ்வில் உள்ளதாகவும், அவரை கொல்லவும் சொல்லினார்கள். இதனை அடுத்து அவர்கள் சொல்லிய மறுநாளே கனகராஜும் இறந்து விட்டார்” என்று கூறினார்.