Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு…. முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை….!!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காவலாளியை கொலை செய்து ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் சசிகலாவின் உறவினரான விவேக்கிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் இன்று கோவை பிஆர்எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தினர்.

Categories

Tech |