Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொள்ளை வழக்கு… சிபிசிஐடி டிஜிபி திடீர் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பல மர்மங்கள் இருந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது மறுவிசாரணை உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூலம் விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். கடந்த 24ஆம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எஸ்டேட் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினார். கூடுதல் விசாரணை ஓரிரு நாட்களில் திரும்ப வருவோம். எனவே ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர். இந்நிலை சிபிசிஐடி போலீஸ் டி.ஜி.பி. ஷகில் அக்தர் இன்று ஊட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து விமான கோவை வரும் அவர், காரில் ஊட்டி செல்கிறார். அந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து அவரே நேரடி விசாரணையில் இறங்க உள்ளார். அப்போது எஸ்டேட்டுக்கு நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களை விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. சிபிசிஐடி உயர் அதிகாரி களம் இறங்கியதால் கொடநாடு வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |