Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடிக்கம்பத்தால் வந்த பிரச்சினை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவி அளித்த புகார்…!!

கொடிகம்பம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் ஏகலூத்து சாலை பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து கடத்த மாதம் சிலம்பரசன் அப்பகுதியில் உள்ள ஒரு கொடிக்கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கொடியை ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சிலம்பரசனை தடுத்து தகராறு செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து இந்த கொடி கம்பம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கொடி கம்பம் என கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கொடிகம்பம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கு சொந்தமானது என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த சிலம்பரன் கடந்த மாதம் 31ஆம் தேதி அதே கொடிகம்பம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக சிலம்பரசனை மீட்டு தேனி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசனை தற்கொலைக்கு துண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Categories

Tech |