Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழா… பக்தர்கள் செல்வதற்கு தடை…சிறப்பாக நடைபெற்ற பூஜைகள் …!!

தைப்பூசத்தை முன்னிட்டு மலை உச்சியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி  நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை  நடைபெற்றது. அதன்பின் வள்ளி- தெய்வானை சமேதரராக வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் அரசின் வழிகாட்டுதலின்படி பக்கதர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால்  சிவாச்சாரியார்கள் மற்றும் கோவிலின் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |