Categories
மாநில செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய “தைப்பூச திருவிழா”…. நிகழ்ச்சி நிரல் எப்போது?…. வெளியானஅறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவானது  கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. அதாவது பழனி முருகன் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் வரும் 17ஆம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் 18-ஆம் தேதியும், நிறைவு விழாவான தெப்பத்தேரோட்டம் 21ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதனிடையில் கோவில் சார்பாக பக்தர்களுக்கு வழியில் இளைப்பாற பந்தல், குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லாத நாட்களில் பொட்டலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்படும். மேலும் கிரிவீதியில் பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |